பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!
தமிழக அரசு, பெண்கள் சொத்து உரிமையை உறுதி செய்யும் நோக்கில், வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது.
மார்ச் 14 ஆம் தேதி, சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பெண்கள் உரிமையை பாதுகாக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு, ஒரு சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெண்கள் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் ரூ.10 லட்சம் மதிப்பிற்குள் பதிவு செய்யப்படும்போது, வழக்கமான பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அதாவது நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், தற்போதைய நிலைமையில் மேற்கொள்ளப்படும் பதிவுகளில் சுமார் 75% வரையிலான பதிவு மாறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
Edited by Siva