ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2025 (14:38 IST)

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

School Student
கடுமையான வெயில் காரணமாக, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொடக்கக் கல்வி இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்ட செய்தியில், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் மூன்றாம் பருவத் தேர்வும் ஆண்டு இறுதி தேர்வும் 09.04.2025 முதல் 21.04.2025 வரை நடைபெறவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதால், பெற்றோர்களின் கோரிக்கைகளையும் பொது மக்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, முதல்வரின் உத்தரவின்படி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தேர்வுகள் முன்கூட்டியே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva