1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanjil sampath challenge mk stalin

ஸ்டாலின் இதை செய்தால் நிர்வாணமாக நடக்க தயார்!.. நாஞ்சில் சம்பத் சவால்!..

nanjil sampath
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின் திமுக தலைவர் பதவிக்கு வந்தவர் அவரின் மகன் முக ஸ்டாலின். திமுகவில் 40 வருடங்களுக்கு செயலாற்றியவர் ஸ்டாலின். இளைஞர் அணி செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர், மேயர், துணை முதல்வர்,  எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை வகித்த பின்னரே அவர் முதல்வராக மாறினார்.

கலைஞர் மறைவுக்குப் பின் திமுகவை வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின்.. வருகின்ற 20206 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது ஏனெனில் வலுவான கூட்டணியை திமுக அமைத்தி இருக்கிறது.. அந்த கூட்டணியில் 24 கட்சிகள் இணைந்திருக்கிறது.

அதேநேரம் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வகி நாஞ்சில் சம்பத் ‘திமுக கூட்டணியில் உள்ள 24 கட்சியின் பெயர்களை ஸ்டாலின் கூறிவிட்டால் நான் நிர்வாணமாக நடக்க தயார்’ என சவால் விட்டிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கரூர் சம்பவத்தில் சகுனி ஆதவ் அர்ஜுனாதான்!.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன் ஷாக்!...