செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:48 IST)

கடுமையான பனிமூட்டம்.! ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!

snow
சீர்காழியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  சென்றன. 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம்  அதிரித்து  வந்தது.
 
பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தாலும்  குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது. இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டு 9 மணியை கடந்தும் கடும் பனி பொழிவு நீடிக்கிறது.
ALSO READ: பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து! வட மாநில வாலிபர் தீயில் கருகி பலி.!!  
பனி பொழிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல்  அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.