பனிமூட்டத்தால் வாகனம் விபத்து...கறிக்கோழிகளை தூக்கிச் சென்ற மக்கள்
உத்தரபிரதேசம் ஆக்ராவில் இன்று கறிக்கோழியை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்திற்குள்ளானது. கூண்டில் வைக்கப்பட்ட கறிக்கோழிகள் சாலையில் விழுந்த நிலையில் சிலர் அதை தூக்கிச் சென்றனர்.
டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இன்று கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. கூண்டில் வைக்கப்பட்ட கறிக்கோழிகள் சாலையில் விழுந்த நிலையில் சிலர் அதை தூக்கிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.