1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (19:23 IST)

காவி உடையில் திருவள்ளூவர்.! சர்ச்சையில் சிக்கினார் தமிழக ஆளுநர்..!!

thiruvallur
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நெற்றியில் விபூதியுடன் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மாட்டுப்பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைச் சொல்லியுள்ளார். அதில் காவி நிற உடையில் வள்ளுவர் நெற்றியில் விபூதிப் பட்டை அணிந்த நிலையில் உள்ள  புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
governor ravi

 
 
திருவள்ளுவர் தினத்தில், நமது தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியில் பிறந்த கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
 
திருவள்ளுவரின் நித்திய ஞானம், நமது தேசத்தின் கருத்துக்களையும் அடையாளத்தையும் அபாரமாக வடிவமைத்து, வளப்படுத்தியது மற்றும் முழு மனித குலத்திற்கும் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது என்றும் இந்த புனித நாளில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஆர்.என் ரவி கூறியுள்ளார். 

காவி நிற உடையில் வள்ளுவர்  புகைப்படத்தைப் பகிர்ந்து தமிழக ஆளுநர் வாழ்த்து செய்தி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.