டிரான்ஸ்பார்மரை பெயர்த்தெடுத்து திருடிய மர்ம நபர்கள்.. ஒட்டுமொத்த கிராமமே இருளில் தவிப்பு..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின் வினியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மரை பெயர்த்தெடுத்து சிலர் திருடி சென்று விட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மின்சார விநியோகம் தடைபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்விநியோகம் செய்து வந்த டிரான்ஸ்பார்மர் திருடப்பட்டு உள்ளது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 240 கிலோ வாட் டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்டு உள்ளதாகவும், இந்த டிரான்ஸ்பார்மரை முழுக்க வெட்டி எடுக்கப்பட்டு அதில் உள்ள மறு விற்பனைக்கு உகந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதாகவும் குறிப்பாக செம்பு வயர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாகவும் தெரிகிறது.
டிரான்ஸ்பார்மர் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையில் மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் டிரான்ஸ்பார்மர் திருடி நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த டிரான்ஸ்பார்மருக்குரிய கிராமம் ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கியுள்ளது என்று கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில் மின்துறை சார்ந்தவர்கள் உதவி இன்றி இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்க முடியாது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில், சிசிடிவி வீடியோ மற்றும் திருட்டு சம்பவம் பகுதியில் உள்ள செல்போன் டவர் ஆகியவற்றின் மூலம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva