1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. North State youth dies in fire accident

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து! வட மாநில வாலிபர் தீயில் கருகி பலி.!!

police station
செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் தீயில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ரோஸ் நகர்  முதல் தெருவில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜமாலுதீன்  என்பவர் பழைய பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர்  வேலை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மித்ராரவி தாஸ் என்ற வாலிபர் புதியதாக வேலையில் சேர்ந்துள்ளார். அதிகாலையில்  சுமார் இரண்டு மணியளவில் கழிவறைக்கு சென்றபோது  அந்த கம்பெனியில் திடீரென தீ பற்றிக் எரிய ஆரம்பித்தது . வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்த மித்ராரவி தாஸ் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த மணலி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று  சுமார்  1 மணிநேரம் போராடி தீயை அனைத்து இறந்தவரின் உடலை மீட்டனர். செங்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
கடுமையான பனிமூட்டம்.! ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!