திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:33 IST)

சரக்கு வாகனங்கள் மோதி விபத்து! இரு பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்..!

accident
திருத்தணி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த சரக்கு வாகனமும் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் நோக்கி சென்ற சரக்கு வாகனமும் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
 
இதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளநீர் வியாபாரியும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டார். இந்த மூன்று வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.  கடும் பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் கிராமிய போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.