அந்தரத்தில் நின்ற லிப்ட்; சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டிற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். சுகாதாரத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வபோது மருத்துவமனைகளையும் சென்று சோதனை செய்து வருகிறார்.
இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றார். திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு மருத்துவமனை செயல்பாடுகளை ஆராய்ந்தார்.
அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் அவர் ஆய்வுகள் மேற்கொள்ள லிப்டில் சென்றபோது திடீரென லிப்ட்டின் இயக்கம் தடைப்பட்டு பாதியில் நின்றது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில், லிப்ட்டில் இருந்த அவசரகால வெளியேறும் வழியாக அவர் வெளியேறினார். இதனால் அங்கு சற்று பரபரப்பு எழுந்தது.
Edit By Prasanth.K