வியாழன், 24 நவம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 24 நவம்பர் 2022 (08:25 IST)

இடிபாடுகளுக்கு இரண்டு நாட்களாக உயிருடன் சிறுவன்! – இந்தோனேஷியாவில் ஆச்சர்யம்!

indonesia
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிறுவன் ஒருவன் இரண்டு நாட்களாக உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடி வந்த நிலையில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இரண்டு நாட்களாக உயிருடன் இருந்த சிறுவனை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சிறுவனின் பாட்டி சிறுவன் அருகே இறந்து கிடந்துள்ளார். ஏற்கனவே சிறுவனின் தாய், தந்தையர் இறந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதால் மீட்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் மேலும் சிலர் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Edit By Prasanth.K