வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (08:35 IST)

வெள்ளத்தில் சிக்கிய 450 பேர் மீட்பு; துர்கா பூஜையில் சோகம்! – மேற்கு வங்கத்தை உலுக்கிய சம்பவம்!

Video
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின்போது ஆற்றில் துர்கா சிலைகளை கரைத்தபோது வெள்ளத்தில் மக்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக நவராத்திரி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நவராத்திரியின் இறுதி நாளில் துர்க்கை சிலையை ஆற்றில் கரைப்பது வடமாநிலங்களில் சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் துர்க்கை சிலையை மால் ஆற்றில் கரைத்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் பலரும் அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளில் இதுவரை 450 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைவரும் மீட்கப்பட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K