செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 21 நவம்பர் 2022 (12:18 IST)

”கலகத் தலைவன்” பற்றி ரிவ்யூ கேட்ட ”கழகத் தலைவர்”! வைரலாகும் வீடியோ!

Kalaga thalaivan
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை நடைபயிற்சி சென்றபோது ‘கலகத்தலைவன்’ படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியாகியுள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி சென்றபோது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் பேசிக் கொண்டே சென்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ‘கலகத் தலைவன் பார்த்தீர்களா?” என கேட்டார்.

அதற்கு அமைச்சர், முதல் நாளே படத்தை பார்த்ததாகவும், படம் நன்றாக உள்ளதாகவும் பதில் அளித்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K