1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (18:31 IST)

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்!

kkssr
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் என்றும் அப்போதெல்லாம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
குறிப்பாக ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் சேர்ந்த 108 அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran