திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (12:52 IST)

பெரியார் சிலையில் எரியும் டயரை வீசியவர் கைது – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

கிருஷ்ணகிரியில் டயரை கொளுத்தி பெரியார் சிலை மீது வீசிய வழக்கில் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி காத்தாளமேட்டு பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம ஆசாமி ஒருவர் எரியும் டவரை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் அந்த பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குளிருக்காக கொளுத்திய டயரை வீசியபோது தவறுதலாக சிலை மீது விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.