வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (10:50 IST)

மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி; தகரம் அடிக்கப்படுமா? – சென்னை மாநகராட்சி பதில்!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி “சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டாலும் வீடுகளில் தகரம் அடிக்கப்படாது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.