செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (12:01 IST)

வேலைக்கா வர மாட்ற.. சிறுமி பெயரில் திருமண பத்திரிக்கை! – புதுக்கோட்டை ஆசாமி கைது!

புதுக்கோட்டையில் வீட்டு வேலைக்கு வராத பெண்ணை பழிவாங்க அவரது மகள் பெயரில் பத்திரிக்கை அடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி செயலாளராக இருந்து வந்த இவரது வீட்டில் கணவனை இழந்த முத்துமணி என்ற பெண் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவரிடம் சுந்தரமூர்த்தி தவறான கண்ணோட்டத்தில் நடந்து கொண்டதால் அந்த பெண் வேலையிலிருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுந்தரமூர்த்தி அந்த பெண்ணை வேலைக்கு வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, முத்துமணியில் 17 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக போலியான பத்திரிக்கை அடித்து கிராமம் முழுவதும் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துமணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து சுந்தரமூர்த்தியை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.