வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (08:22 IST)

சூரப்பாவின் பதவி காலத்தையும் நீட்டிக்க ஆளுநர் முடிவு: கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய கமிஷன் ஒன்று தமிழக அரசு அமைத்துள்ளது என்பதும், அந்த கமிஷனின் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சூரப்பாவின் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவரது பதவிக் காலத்தை நீடிக்க தமிழக கவர்னர் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலுக்கு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலத்தை தமிழக ஆளுநர் நீட்டித்துள்ளார். இதற்கே பெரும் எதிர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பியுள்ள நிலையில் இதனை அடுத்து வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பதவி காலத்தையும் நீட்டிக்க தமிழக ஆளுநர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் மீது குற்றச்சாட்டு எழுந்து, அது குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர்