1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (14:27 IST)

கல்வி நிலையங்கள் இப்போது எதற்கு? வைரமுத்து டிவிட்!

கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன் என வைரமுத்து டிவிட். 
 
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும் வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது. இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக என பதிவிட்டுள்ளார்.