வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (08:24 IST)

ஜனவரி 14ஆம் தேதியுடன் முடிவடையும் இஸ்ரோ சிவன் பதவிக்காலம்: அடுத்தது என்ன?

இஸ்ரோ தலைவராக தற்போது செயல்பட்டு வரும் தமிழரான சிவன் பதவிகாலம் ஜனவரி 14ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி இஸ்ரோ சிவனின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இஸ்ரோ சிவன் பதவிகாலம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து அடுத்த இஸ்ரோ தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன் ஜனவரி 14 2022ஆம் ஆண்டுவரை இஸ்ரோ சிவனுக்கு பதவி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
விண்வெளித் துறையில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த இஸ்ரோ சிவன் தற்போது தலைவராக பதவி வகித்து வரும் நிலையில் அவரது பதவி நீட்டிப்பு குறித்து அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
கடந்த 1982ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி ஆக பொறுப்பை ஏற்ற சிவன் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது செவ்வாய் கிரகத்திற்கு அவர் அனுப்பிய சாட்டிலைட் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது