அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு எப்போது? புதிய தகவல்

anna university
அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு எப்போது? புதிய தகவல்
siva| Last Updated: வியாழன், 24 டிசம்பர் 2020 (07:57 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தெரிந்ததே
இருப்பினும் இறுதி அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என யுஜிசி சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு ஜனவரியில் நடைபெறும் என்றும் இந்த தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது மேலும் 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

ஜனவரியில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற போதிலும் தேர்வுகளின் தேதி குறித்த அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :