1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Obama and Jo biden condemned Trump protests

பதவிக்காலம் முடிஞ்சா கிளம்புங்க.. என்ன இதெல்லாம்!? – ஒபாமா, ஜோ பிடன் கண்டனம்!

World
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரம் செய்ததை பல அமெரிக்க அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை சிதைப்பதாகவும், மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் ஆதரவாளர்கள் மூலம் கிளர்ச்சியில் ஈடுபடுவதாகவும் ஜோ பிடன், ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
எல்லாம் பறவைக்காய்ச்சல் எஃபெக்டு! – கிடுகிடுவென குறைந்த முட்டை விலை!