நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி திமுகவை விமர்சித்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது மறைமுகமாக தவெகவை விமர்சிப்பதாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முடித்தார். அதில் அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடியாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், எம்ஜிஆர் திமுகவை அகற்றியதை போல 2026ல் விஜய் திமுகவை அகற்றுவார் என பேசியிருந்தார். திமுக - தவெக இடையே இந்த மோதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று திருவெண்ணெய்நல்லூரில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் சரி, மத்தியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, 2026ல் திமுகவிற்குதான் வெற்றி” என்று பேசியுள்ளார். லோக்கலில் இருந்து வந்தாலும் என அவர் தவெகவைதான் மறைமுகமாக குறிப்பிட்டு பேசுவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K