1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:12 IST)

திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!

Udhayanithi Vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த மறைமுக விமர்சனத்திற்கு தவெக செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.

 

 

அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். விஜய்யின் மாநாட்டிற்கு குவிந்த கூட்டம் அரசியல் கட்சிகள் பலருக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக கட்சி மற்றும் விஜய் குறித்து மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.

 

முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள தவெக செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் “முதல் அமைச்சர் எங்கள் தலைவரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை. தங்கள் குடும்ப ஆட்சியை காப்பாற்ற மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது திமுகவின் மரபணுவிலேயே உள்ளது. 1970களில் திமுக குடும்ப ஆட்சியை அகற்ற எம்ஜிஆர் கலகம் செய்தார், அதை அகற்றியும் காட்டினார். வரும் 2026ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். திமுக குடும்ப ஆட்சியை துடைத்தெறிந்து ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K