விஜய்யின் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடும் என சீமானுக்கு அச்சம்: – எம்பி மாணிக்கம் தாகூர்!
விஜய்யின் வருகை நாம் தமிழர் கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடும் என்று சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
விஜய்யின் வருகை தனது கட்சி கூடாரத்தை காலி செய்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை மட்டும் வாக்களித்துவிட்டு மறுமுறை வேறு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக தான் சீமான் திகழ்கிறார்.
எப்போதுமே புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுங்கட்சி விமர்சனம் செய்து பழக்கம். அந்த வகையில் தான் விஜய் தற்போது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதை இனிமேல் தான் முடிவு செய்ய முடியும்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ள நிலையில், இதற்கு சீமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran