புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (13:00 IST)

இது எச்சரிக்கை அல்ல.. கட்டளை..! - சீமானுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

TVK

நடிகர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

 

 

தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முடித்தார். அதுநாள் வரை விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதன்பின்னர் விஜய்யின் கொள்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என அறிவித்தார்.

 

மேலும் கூட்டம் ஒன்றில் பேசியபோது விஜய்யையும், தவெக கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் தவெக, நாதக தொண்டர்களிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
 

 

இந்நிலையில் சீமானை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் சீமானை அரசியலின் செல்லாக்காசு என குறிப்பிட்டு விமர்சித்துள்ள அவர்கள் விஜய்யிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

2026 சட்டமன்ற தேர்தல் உதயநிதி Vs விஜய் என்று இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சீமான் vs விஜய் மோதல் நடந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K