1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (12:09 IST)

புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வது உண்மையா? திருமாவளவன் விளக்கம்..!

Thiruma
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக ஒரு ஆண்டுக்கு முன்பே எடுத்த முடிவு இது. நான் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஒரு ஆண்டுக்கு முன்பே வாக்குறுதி அளித்திருந்தேன். இந்த புத்தக விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக இருந்தது.

இந்த விழா ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்த திட்டமிட்ட நிலையில், விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். என்னைப் போன்று வேறு சிலரும் எழுதிய கட்டுரைகள் தான் இதில் உள்ளன.

தற்போது இந்த புத்தக விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்வார் என அவரது கட்சி மாநாட்டிற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து கலந்து ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Edited by Mahendran