இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்
சமீபகாலமாக விஜயையும் அவரை சார்ந்த ரசிகர்களையும் தொண்டர்களையும் தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து வருவதை பார்க்க முடிகின்றது. அதற்கேற்ப ஒரு சிலரது செயல்களும் இருப்பதாகவே தெரிகிறது. தவெக என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமிழக தேர்தலில் புதியதொரு மாற்றத்தை செயல்படுத்த விஜய் முயன்று வருகிறார்.
பல ஆண்டுகளாகவே திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள்தான் மாற்றி மாற்றி ஆட்சியை அமைத்து வருகின்றன. இந்த தேர்தலில் எப்படியாவது அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். தன்னுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருக்கிறார் அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்.
அதற்கேற்ப பல்வேறு ஊர்களுக்கு சென்று தேர்தல் பரப்புரையை நடத்தி வருகிறார். சமீபத்தில்தான் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை செய்தார். அடுத்ததாக ஈரோட்டில் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார். இதற்கு முன் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற விஜய், கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பெரும் அசாம்பாவிதத்தை அவர் எதிர்கொண்டார்.
அதனால் அவருக்கு பல்வேறு வகைகளில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள் எந்தவொரு ஆபத்தையும் உணராமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. மரங்களில் ஏறுவது, கொடி கம்பத்தில் ஏறுவது, ஒளி விளக்கு கம்பங்களில் ஏறுவது என ஆபத்தை விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு படி மேலாக இன்று ஒரு வீடியோ வெளியாகி தற்குறிகளா இருக்கீங்களே என்று சொல்லும் அளவுக்கு ஒரு ரசிகர் செயல் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் என்றாலே அயப்பனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பல பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி வழிபாட்டை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சபரி மலையில் தவெக கொடியை தாங்கியவாறு வழிபாடு செய்ய செல்கிறார். அந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.