தலைமையின் முடிவு சரியா?? உதயநிதிக்காக வரிந்து கட்டி வந்த முரசொலி!
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போது பல விமரசங்கள் முன்வைக்கப்பட்ட. வாரிசு அரசியல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்தினால் பதவி என பலர் பேசிய நிலையில் இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி பதில் அளித்துள்ளது.
முரசொலியில் ’உதயநிதி நியமனமும்.. ஓநாய்களின் கண்ணீரும்' என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள் பின்வருமாறு, உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைந்துவிட்டது.
அவர்கள் காந்தாரியைப் போல் அம்மி கல்லை எடுத்து தங்களது அடிவயிற்றில் அடித்து கொள்ள தொடங்கி உள்ளனர். திமுக தலைமை தன்னிச்சையாக என்றும் எந்த முடிவும் எடுப்பதில்லை.
நிர்வாகத்தில் உள்ளவர்கள் விருப்பங்கள் முறிறிலும் அறிந்துதான் கழகத்தின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆதிக்க சக்திகளும் அதன் அடிவருடிகளும் தான் இப்போது உதயநிதி நியமனத்துக்காக ஓநாய் கண்ணீர் விடத் துவங்கியுள்ளனர்.
உதயநிதியின் நியமனம் கண்டு எதிரிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதே அவர்களது மிரட்சியை காட்டுகிறது. எதிரிகளின் இந்த ஓலமே தலைமை மிக சரியான தேர்வை செய்துள்ளதற்கு அத்தாட்சியாகிவிட்டது என்று எழுதப்பட்டுள்ளது.