வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (07:40 IST)

ஜெயா டிவியும் போச்சா? உச்சகட்ட அதிர்ச்சியில் தினகரன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, அதிமுகவிவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்து வந்தது. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்ததில் தினகரன் ஆதரவாக ஜெயா டிவி செயல்பட்டது
 
இதனால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டதால் நியூஸ் ஜெ டிவி என்ற தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது திடீரென ஜெயா டிவியும் அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டு வருகிறது
 
ஏற்கனவே தினகரனின் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன், இசக்கி சுப்பையா உள்பட பலர் அடுத்தடுத்து விலகி அதிமுகவின் சேர்ந்து வரும் நிலையில், தற்போது ஜெயா டிவியும் அதிமுக பக்கம் தாவியுள்ளது தினகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது
 
ஜெயா டிவி நிர்வாகிகள், செய்தியாளர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டதால் அந்த தொலைக்காட்சி தற்போது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே தற்போது நியூஸ்ஜெ, ஜெயா டிவி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது