மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை திமுக எம்பி கனிமொழி இன்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர்களையும் குஜராத் அருகே காணாமல் போன தமிழக மீனவர் அண்ணாதுரை என்பவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது கனிமொழி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து அவரிடம் கடிதம் ஒன்றை வழங்கிய நிலையில் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கேட்டுக் கொண்டேன்.
Edited by Siva