செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 நவம்பர் 2024 (17:57 IST)

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு வந்ததை அடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்ட நிலையில், தற்போது அமெரிக்காவின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. இதனை அடுத்து போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், லெபனானில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

13 மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்-லெபனான் எல்லை பகுதியில் அமைதி நிலவுவதாகவும், போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக இருந்த லெபனான் மக்கள் தற்போது மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இனி இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், "நாங்கள் நிம்மதியாக எங்கள் நாட்டில் வாழ்வோம்" என்று லெபனான் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva