யார் இந்த பாலாஜி ஹாசன்? துர்கா ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன??

Last Updated: புதன், 17 ஜூலை 2019 (12:39 IST)
தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்துள்ளார். 
 
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்பவர் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருபவர். சேலத்தை சேர்ந்த இவர் உலகக்கோப்பை வெற்றி குறித்து கணித்து கூறியதன் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலானவர். 
 
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெறும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் இவர் கணித்திருந்தார். 
இவர் கணிப்பை போலவே உலகக்கோப்பை போட்டி முடிவுகள் இருந்தன. இதைதவிர்த்து ரஜினி, கமல், அஜித் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்தும் இவர் கணித்துள்ளார். ரஜினிக்கு அரசியலில் மக்களின் ஆதரவு இருக்காது என்றும், கமல்ஹாசன் தவறுகளை சுட்டிக்காட்டும் நபராக மட்டுமே இருப்பார் என்றும், நடிகர் விஜய் அஜித் அரசியலுக்கு வர மாட்டார்கல் எனவும் கணித்து தெரிவித்துள்ளார். 
 
விளையாட்டு, அரசியல் மட்டுமின்றி சமீபத்தில் நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டிற்குள் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரைதான் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சந்தித்துள்ளார். 
ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டுள்ள துர்கா ஸ்டாலின் இந்த சந்திப்பின் போது தனது கணவர் முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறதா என கேட்டு தெரிந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஜோதிடர் பாலாஜி ஹாசனும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :