செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (08:25 IST)

அதிமுகவுக்கு கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த ஐடியா!

தேர்தல் வியூகம் அமைக்க அரசியல் கட்சிகள். கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகுவது தற்போது ஒரு வழக்கமாக இருக்கிறது.   கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆரம்பித்து வைத்த இந்த கார்ப்பரேட் கலாசாரத்தை அதன் பின்னர் மேற்குவங்கம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வருகின்றனர் 
 
அரசியல் வியூகம் அமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்தான் இந்திய அளவில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளிடமும் பேசி வந்தது. ஆனால் மக்கள் நீதி மையம் கட்சிக்கு கிஷோர் நிறுவனம் உதவும் என கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த நிறுவனம் அதிமுகவுக்கு ஒருசில ஐடியாக்கள் கொடுக்க முன்வந்துள்ளது.
 
அதில் ஒன்று தான் அதிமுகவை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது. அதுமட்டுமின்றி அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் குறைந்து விட்டது என்பதால் அதை ஈடுகட்ட மற்ற சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களை கவரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் வாக்குகளை கவர சில அதிரடி அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என்றும் கிஷோர் தரப்பு அதிமுகவுக்கு ஐடியா கொடுத்துள்ளார்கள்
 
ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கு ஆதரவாக வேலை செய்ய முடியாது என்பதால் அதிமுகவுக்கு ஐடியா மட்டும் கொடுத்துவிட்டு, கமல் கட்சிக்கு முழுவீச்சில் வேலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்