திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (17:40 IST)

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் வெற்றி சான்றிதழ் வழங்கியது. இந்த சான்றிதழை ராகுல் காந்தி தனது கையால் சகோதரிக்கு கொடுத்து இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில், முதல் முறையாக தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை ராகுல் காந்தி தனது சகோதரர்களிடம் வழங்கி வாழ்த்து கூறினார். வெற்றி பெற்ற தங்கை பிரியங்காவுக்கு இனிப்பு ஊட்டியாக வாழ்த்து தெரிவித்த புகைப்படம் பிரியங்கா காந்தியின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்:

"வயநாட்டைச் சேர்ந்த எனது சகாக்கள் இன்று எனது தேர்தல் சான்றிதழை கொண்டு வந்து கொடுத்தனர். என்னை பொறுத்தவரை இது ஒரு ஆவணம் அல்ல, இது உங்கள் அன்பு நம்பிக்கை. உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்ல என்னை தேர்வு செய்ததற்கு வயநாட்டு மக்களுக்கு நன்றி."

என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Mahendran