1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center warns about rain

அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் மழை: 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கனமழை
அடுத்த இரண்டு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கன மழை இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் ஆகிய 6 மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த நாட்களில் தெரியுமா?