1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac sale sudden down in Tamil Nadu

தமிழகத்தில் மது விற்பனை திடீர் சரிவு: என்ன காரணம்?

மதுவிற்பனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மது விற்பனை வெகுவாக சரிந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மது விற்பனை மிகவும் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மதுக்கடைகள் சரியாக திறக்கவில்லை என்றும் அது மட்டுமின்றி பல மதுக்கடைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
அதே போல் மழை காலம் என்பதால் பீர் வகைகள் விற்பனை சரிந்து உள்ளதாகவும் சராசரி விற்பனை விட 60 சதவீதம் குறைவாக பீர் விற்பனை நடந்ததாகவும் அதேபோல் மது விற்பனையும் 40 சதவீதம் சரிவு அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை தரும் மது விற்பனை திடீரென சரிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
டென்மார்க், ஜெர்மனிக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை