தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுடன் சேர்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! – இலங்கை அதிபர் உருக்கம்!
- தேசிய கொடியை புரொபைல் பிக்சராக வைத்த ராகுல், பிரியங்கா காந்தி
- ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!
- பிரிட்டன் பிரதமர் தேர்தல்: முந்துகிறாரா ரிஷி சுனக்?
- ஜூலை மாதத்தில் மட்டும் 600 கோடி: யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர் மோடி பாராட்டு!
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று பிரதமரை சந்தித்த மம்தா பானர்ஜி!
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திலும் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
