1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (19:27 IST)

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய விவசாயி!

child
குஜராத்தில் ஒரு பெண் குழந்தையை உயிருடன் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் என்ற கிராமத்தில் ஒருவர் தனக்குப் இறந்த பெண் குழந்தையை ஈவு இரக்கமின்றி மண்ணில் புதைத்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த விவசாயி ஹிதேந்திர சிங், அக்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஹியத் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தக் குழந்தையைப் புதைத்த அப்பா அல்லது அம்மாவை போலீஸார் தேடி வருகின்றனர். உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளபோலீஸார், விரைவில் அவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.