தொடர்புடைய செய்திகள்
- திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்: இன்று முதல் விற்பனை!
- திருப்பதியில் பிரம்மோற்சவ விழா! – நாளை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!
- திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
- திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பவித்ரோற்சவம்: நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட்!
- திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
செப்டம்பர் மாதத்திற்கு அங்கப்பிரதட்சண டோக்கன்! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் நேர்த்திக்கடன் செய்வதற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ப்ரம்மோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பிரம்மோற்சவத்தை காண பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக செப்டம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில் நேர்த்தி கடன் செலுத்துவோருக்கான செப்டம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் 22ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது. இந்த டோக்கன்கள் செப்டம்பர் 26ம் தேதி வரை உள்ள நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், செப்டம்பர் 27ல் பிரம்மோற்சவம் தொடங்குவதால் அதுமுதல் அங்கபிரதட்சண டோக்கன் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
