வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (20:54 IST)

திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

tirupati
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் யுபிஐ செயலி மூலமே கட்டணம் செலுத்தலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இதுவரை பணம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வந்த நிலையில் இனி பக்தர்கள் கியூஆர் கோடு மூலம் யூபிஐ செயலி மூலம் பணம் செலுத்தலாம் என்றும் இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது