திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (14:35 IST)

2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஆவணம் இல்லாம மாத்தலாம்?! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்
இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் அறிவித்துள்ளன. வங்கிகளில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு ரூ.2000 நோட்டுகள் மட்டுமே மாற்ற முடியும் என்றும், அதற்கு ஆவணங்கள் தேவை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி கிளை வங்கிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை இவ்வாறு ஆவணங்கள் இன்றி மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்தை மாற்ற விரும்புபவர்கள் எந்த சிரமும் இன்றி எஸ்பிஐ வங்கிகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K