பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு ....8 பேர் பலி
செர்பியா நாட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர், 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பியா கண்டத்தில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்த நாட்டில் தலைஅங்கர் பல்கிரெடி மாகாணத்தில் விரகார் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
இப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் இன்று திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினான். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.