1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மே 2023 (21:26 IST)

வங்கிகளுக்கு நாளை விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாளை ( மே 5 ஆம் தேதி) இந்திய வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்திய ரிசவர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குறிப்பிட்ட  மாநிலங்களில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும்  4வது சனிக்கிழமைகளைக் கருத்திக் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் இதிய வங்கிகளுக்கு மொத்தம் 12  நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த விடுமுறை தினங்களை குறித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.