ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கிச்சூடு
செர்பியா நாட்டின் துபோனா என்ற பகுதியில் ஓடும் காரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில்,8 பேர் பலியாகினர்.
செர்பியா நாட்டின் தலைநகர் பெகிரேடில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ள துபோனா என்ற பகுதியில் நேற்றிரவு ஓடும் காரில் இருந்த ஒரு நபர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டான்.
இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர், 14 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்த நிலையில், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, கிராகுஜேவாக் நகரில் அருகேயுள்ள பகுதியில் கொலையாளியை போலீஸர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.