நீங்க இல்லாதப்போ.. நாடே மகிழ்ச்சியாக இருந்தது!? – பிரதமர் மோடியிடம் சொன்ன ஜே.பி.நட்டா!
வெளிநாட்டு பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ள நிலையில் இந்திய மக்களின் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக கடந்த வாரத்தை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். மேலும் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவன தலைவர்களையும் சந்தித்தார்.
அங்கிருந்து பின்னர் எகிப்துக்கு பயணித்த பிரதமர் அவர்கள் அளித்த கௌரவ விருதுகளை ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய பிரதமரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்க சென்றுள்ளார்.
அவரிடம் முதல் கேள்வியாக “இந்தியாவில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்?” என விசாரித்துள்ளார். அதற்கு ஜே.பி.நட்டா “9 ஆண்டு கால சாதனைகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். நாடே மகிழ்ச்சியாக உள்ளது” என்று பதிலளித்துள்ளார். இந்த தகவலை பாஜக எம்.பி மனோஜ் திவாரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K