1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (18:36 IST)

தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் - முதல்வர் முக.ஸ்டாலின்

MK Stalin
''தமிழகத்தில், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!’’  என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுபற்றி  முதல்வர் முக ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று பதிவிட்டுள்ளதாவது :

‘’வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு, சிறப்புப்பிரிவு மருத்துவர்களைக் கொண்டு, தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏழை - எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து நடத்தும் இந்த முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தப் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!’’  என்றுதெரிவித்துள்ளார்.