திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (07:30 IST)

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி… அவரே வெளியிட்ட புகைப்படம்!

80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் குஷ்பு. பின்னர் திருமணம் செய்துகொண்டு அவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இறங்கிய குஷ்பு திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு சமீபத்தைய சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார்.

எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.  பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் பதவி வகித்துக்கொண்டே சினிமா பணிகளிலும் ஈடுபடுகிறார். இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “இடுப்பு எலும்புக்காக மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அது முழுவதுமாக குணமாகும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.