வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (18:15 IST)

நடிகர் விஜய் பற்றி அவதூறு: பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது

uma bjp supporter
பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். பாஜக ஆதரவாளரான இவர் சமீபத்தில் தன் டிவிட்டர் பக்கத்தில், பெரியார் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, கோவை மத்திய சிறையில் உமா கார்த்திகேயன் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த  நிலையில் நடிகர் விஜய் பற்றி அவதூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், கோவை மத்திய சிறையில் இருந்து  உமா கார்த்திகேயனை  இன்று சென்னை அழைத்து செல்கின்றனர்.