ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மார்ச் 2025 (12:51 IST)

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

myanmar

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 அளவுகளில் பதிவான பயங்கர நிலநடுக்கங்களால் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அணை உடைந்ததோடு, நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன

 

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கி ஏராளமானோர் பலியான நிலையில் மீட்பு பணிகள் வேகவேகமாக நடந்து வருகின்றன. இந்த பேரிடர் சம்பவத்தில் மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை அறிவித்துள்ளன.

 

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சிதிலமடைந்த பகுதிகளில் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மியான்மரில் மட்டும் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தாய்லாந்து பாதிப்புகளும் சேர்த்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K